நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 09, 2015

கும்பாபிஷேக தரிசனம்

திருஏரகம் எனும் சுவாமிமலை திருக்கோயிலில் இன்று காலை திருக்குடமுழுக்கு விழா இனிதே நிகழ்ந்தது..

பெருந்திரளான பக்தர்கள் அதிகாலை முதல் குழுமியிருக்க -
குறித்த நேரத்தில் வெகு சிறப்புடன் -


ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியின் திருமூலஸ்தான விமானத்திற்கும்
ஏனைய பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கும் ராஜகோபுரங்களுக்கும் திருக்குடமுழுக்கு செய்விக்கப்பெற்றது..




அதிகாலை நான்கு மணி அளவில் - ஆறாம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கின..

மங்கல வேள்வியில் பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நிகழ்ந்ததும் -

புனித நீர் நிறைந்த கடங்கள் புறப்பாடாகின..

திருப்புகழ் மற்றும் வேத பாராயண - மங்கல வாத்திய முழங்கங்களுடன்
யாக சாலையிலிருந்து புறப்பட்ட கடங்கள் - திருக்கோயிலை வலம் வந்தன.







காலை 6.30 மணியளவில் - திருமூலஸ்தானம் உள்பட அனைத்து விமானங்களும் மங்கலகரமாக திருக்குடமுழுக்கு நடைபெற்றது..

பரவசத்துடன் கூடியிருந்த பக்தர்களின் மீது புனித நீருடன் மலர்களும்  தெளிக்கப்பட்டன..







தொடர்ந்து - திருக்கோயிலில் ஸ்ரீ சுவாமிநாதப் பெருமான் சந்நிதி தரிசனமும் பிரசாதமும் வழங்கப்பெற்றது..

இன்று மாலை 5.00 மணியளவில் -
ஸ்ரீ சுவாமிநாதப் பெருமானுக்கு மகா அபிஷேகம்.. அலங்கார தீபாராதனை..

இன்று இரவு 8.00 மணியளவில் பஞ்சமூர்த்தி திருவீதி எழுந்தருளல்..

திருக்குடமுழுக்கு வைபவத்தின் நிகழ்வுகளை வழங்கிய திருவையாறு சிவ சேவா சங்கத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்றும் உரியன..

* * *

மேலும் -

இன்றைய இளங்காலைப் பொழுதிலேயே - இன்னுமொரு இனிய நிகழ்வாக,

திருக்குடந்தை ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயிலிலும் மஹா சம்ப்ரோக்ஷணம் நிகழ்ந்திருக்கின்றது..

அன்பிற்குரிய ஐயா திரு. ஜம்புலிங்கம் அவர்கள், திருக்குடமுழுக்கினைத் தரிசித்ததோடு - சில படங்களையும் அனுப்பி வைத்திருந்தார்..

அவற்றுடன் மேலும் சில படங்களையும் வழங்குவதில் - இன்றைய பதிவில் மகிழ்வெய்துகின்றேன்..


திரு. Dr. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு நன்றி
Photo By Dr. B.Jambulingam
Photo By Dr. B.Jambulingam






அன்பின் திரு. Dr. B. ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கும் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

பொங்கும் மகிழ்வும் உற்சாகமும் எங்கும் தங்கிட 
இறையருள் துணையிருப்பதாக..

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..

ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி திருவடிகள் போற்றி..
* * *  

14 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் அய்யா,
    தாங்கள் தொலைவில் இருந்தாலும் இங்கே உங்கள் மனம்,,,,,,,,,,,
    சுவாமிமலை குடமுழுக்கு விழா புகைப்படங்கள் அழகு, தங்கள் தொகுப்பும் அருமை, நேரில் சென்றது போல் ஓர் உணர்வு.
    நன்றி பகிர்வுக்கு,,,,,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மையில் மனம் அங்கேதான் இருக்கின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. குடமுழுக்கு விழாவை நேரே கண்டு களித்த மகிழ்ச்சி. உங்களுக்கும், ஜம்புலிங்க சாருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. உங்களது புகைப்படங்கள் நேரில் நாங்கள் பார்க்காததை எங்களுக்குத் தந்தது. நன்றி. காலை 3.00 மணிக்கு எழுந்து நாங்கள் புறப்பட்டுச் சென்று மதியம் திரும்பினோம். அப்பதிவை இட ஆரம்பித்தபோது உங்கள் பதிவைக் கண்டேன். மனதிற்கு நிறைவாக இருந்தது. ராமசாமி கோயில் செல்ல மட்டுமே திட்டமிட்டிருந்தோம். இறையருளால் இதே நாளில் கும்பாபிஷேகம் காணுகின்ற கும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயிலுக்கும், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலுக்கும் சென்றோம். அந்த வாய்ப்பினைத் தந்த இறையருளை நினைந்து போற்றுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அனைத்தும் அவன் சித்தம்..
      ஸ்ரீராமசாமி திருக்கோயில் கும்பாபிஷேக படங்களை வழங்கிய தங்களுக்கு மீண்டும் நன்றி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. விழாவை நேரில் கண்டு களித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை தந்து கண்டு களித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  7. கண்களில் ஒற்றிக் கொண்டேன் ஐயா!

    அருமையான தரிசனம்!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..