நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 11, 2013

சித்திரைச் செல்வி


பருவ காலங்களில் சிறந்தது இளவேனில். இளவேனிற் காலத்தின் முதல் மாதமே சித்திரை தான்.


சித்திரையில் மழை முழுதுமாக  நீங்குகின்றது. ஆதவன் முழுச்சக்தியுடன் வெளிப்பட்டு நோய்க் கிருமிகளைச் சுட்டு எரித்து, உலகம் பிணி, பீடைகளில் இருந்து நீங்கி ஆரோக்கியமாக இயங்க வேண்டுமென ஜோதிப்பிழம்பாகச் சுழல்கின்றான்.

நட்சத்திர வரிசையில்  பதினான்காவது இடத்தில் உள்ள சித்திரை நட்சத்திரம் முழுநிலவுடன் கூடி வரும் காலம் சித்திரை மாதம்.   

பன்னிரண்டு இராசிகளுள் ஆறாவதான கன்னி ராசியிலும் அடுத்து துலா ராசியிலும் சித்திரை நட்சத்திரம் அங்கம் வகிக்கின்றது.

நந்தன வருடம் நிறைவடைந்து - ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 1.24 மணிக்கு வளர்பிறை சதுர்த்தி கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், ரிஷப ராசி மகர லக்னம் நான்காம் பாதத்தில், 

நவாம்சம் - மேஷ லக்னம் மீனராசியில் ஆயுஷ்மான் நாம யோகத்தில் வனிசை நாம கரணத்தில், அமிர்த யோகம் நேத்திரமற்ற, ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் வல்லூறு இரவு நான்காம் ஜாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில் ,

சூரிய தசையில் செவ்வாய் புக்தியில் சனி அந்தரத்தில் புதன் ஓரையில்   புதிய  வருடமான ஸ்ரீ விஜய வருடம் பிறப்பதாக - ''ஜோதிட ரத்னா'' முனைவர் க.ப.வித்யாதரன் அவர்கள் தெரிவிக்கின்றார்.

ஆறு வகைப் பருவங்களில் சிறந்து விளங்கும் இளவேனிற் காலத்தில் புது மலர்கள்  பூத்து எங்கும்  நறுமணம் பரப்ப - நறுங்கனி எனும்  சீர்வகைகளைச் சுமந்து -  

''விஜய'' என்னும் திருப்பெயருடன் சிரித்து வருகின்றாள் சித்திரைச் செல்வி.

சித்திரைச் செல்வியை
வருக.. வருக.. என வரவேற்போம்!..

வாழ்க நலம்..  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..